Avee player பயன்படுத்துவது எப்படி ?
உங்கள் அனைத்து வினாக்களுக்கும் பதில் இதோ.. மேலும் விவரங்களுக்கு Black Tech Tamil சேனல் பார்த்து கொள்ளலாம். நான் பயன்படுத்தி வரும் பயன்பாடு பதிப்பு (avee player 1.2.83)கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேமித்து கொள்ளுங்கள் .
சேமித்து வைத்த templates எப்படி திறப்பது ?
சேமித்து வைக்கப்பட்டுள்ள பயன்பாட்டை திறக்க வேண்டும். பிறகு ஒன்பது சிறிய பெட்டிகள் இருக்கும். அதை கிளிக் செய்யவும். கீழே முதலில் இருப்பது
Save to file.. அதாவது நீங்கள் உருவாக்கிய templates சேமித்து வைப்பது. இரண்டாவது load from file.... இதை கிளிக் செய்து சேமித்து வைக்கப்பட்டுள்ள templates திறக்க வேண்டும். மூன்றாவது DUPLICATE .. அதாவது templates இணையான மற்றொரு templates உருவாக்க முடியும்.
நான்காவது remove...உருவாக்கிய templates நீக்குவது.
புகைப்படத்தை எப்படி மாற்றுவது ?
பென்சில் என்ற ஐகான் கிளிக் செய்யவும். இடது பக்கமாக புதிய பகுதி திறக்கும். பிறகு images என்பதை கிளிக் செய்தால் ஐந்து அப்சன்ஸ் இருக்கும். அதில் இரண்டாவது images என்பதை கிளிக் செய்யவும். அதில் custom images கிளிக் செய்து புகைப்படம் உள்ளிட்ட வேண்டும்.
உங்கள் பெயரை எப்படி சேர்ப்பது ?
பென்சில் என்ற ஐகான் கிளிக் செய்யவும். இடது பக்கமாக புதிய பகுதி திறக்கும். பிறகு text என்பதை கிளிக் செய்தால் இரண்டு அப்சன்ஸ் இருக்கும். அதில் இரண்டாவது appearance என்பதை கிளிக் செய்து உரையில் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
ஆடியோக்களை இணைப்பது எப்படி ?
இடது புறத்தில் மூன்று கோடு இருக்கும். அதை கிளிக் செய்தால் நூலகம் உள்ளே சென்று ஆடியோக்களை தீர்மானித்து கொண்டு கிளிக் செய்யவும்.
மீண்டும் மூன்று கோடு கிளிக் செய்து visualizer என்பதை கிளிக் செய்யவும்.
உருவாக்கிய வீடியோவை சேமிப்பது எப்படி ?
நாம் உருவாக்கிய வீடியோவை சேமிப்பதற்காக மேலே மூன்றாவது ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து சேமிக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். சேமிப்பதற்கு பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். கீழே export னு இருக்கும். அதை கிளிக் செய்து சேமித்து வைக்கும். மேலும் விவரங்களுக்கு Black Tech Tamil சேனல் பார்த்து கொள்ளலாம்.
AVEE MUSIC PLAYER (1.2.83)
DOWNLOAD LINK
MEDIAFIRE Download Link (Template)


Comments
Post a Comment